3 கால்நடை மருத்துவமனைகளில் ரூ.1 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்
- நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்றது
- அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி :
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2023-
2024-ம் நிதி ஆண்டுக்கான நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கொட்டா ரம், மயிலாடி, பறக்கை ஆகிய 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்து வமனைகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய கட்டிடங் களின் திறப்பு விழா கொட்டாரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பூதலிங்கம் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் உதவி இயக்குனர் டாக்டர் நோபிள், நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாநில தி.மு.க.வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தக்கலை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்கு னர் டாக்டர்எட்வர்ட் தாமஸ், கால்நடை பல்கலைக் கழக உதவிபேராசிரியர் டாக்டர் ஜெனசிஸ், பொதுப் பணித் துறை செயற்பொறி யாளர் வேலுசாமி, உதவி செயற் பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரித் துரை, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.