உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே வட மாநில தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

Published On 2022-08-22 07:46 GMT   |   Update On 2022-08-22 07:46 GMT
  • பெண்களை அவதூறாக பேசியதால் சக தொழிலாளி ஆத்திரம்
  • தலைமறைவான கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ (வயது 28), அனில் பர்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அங்கேயே உள்ள அறை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்ப டுகிறது. பின்னர் சோம்போ, அனில்பர்மன் இருவரும் குடிபோதையில் இருந்தபோது அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

சோம்போ, அனில்பர் மனின் உறவினர் களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. பெண்களை இழிவாக பேசியதால் ஆத்திரமடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டிலால் சோம்போவை தாக்கினார்.பின்னர் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பியா லும் அடித்தார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோம்போ உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அனில் பர்மனை கைது செய்தனர்.

கைது செய்யப் பட்ட அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் தாமரைகுளம் அருகே மணக்குடி பகுதியில் இதே போல் ஒரே அறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News