கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் இன்று காலை தொடங்கியது
- 2-ம் திருவிழாவான நாளை காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.
- பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகானந்தகேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது. இங்கு பவித்ர உற்சவம் திருவிழா இன்று தொடங்கியது இந்த திருவிழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இன்று காலையில் ஆச்சாரிய வர்ணம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு அங்குரா அர்ப்பனம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் திருவிழாவான நாளை (23-ந்தேதி) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது.
4-ம் திருவிழாவான 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு பவித்ர உற்சவம் நடக்கிறது. அப்போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது.
பவித்திர உற்சவ திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மின் விளக்கு அலங்கா ரத்தில் ஜொலிக்கிறது. பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னை யில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துணை செயல்அலுவலர் விஜயகுமார், கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேம தர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.