உள்ளூர் செய்திகள்

கடைகள் மற்றும் நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் அபராதம்

Published On 2023-10-31 07:29 GMT   |   Update On 2023-10-31 07:29 GMT
  • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
  • ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளதை தொ டர்ந்து எனது தலைமையில் (மணிகண்ட பிரபு) தொழிலா ளர் உதவி ஆய்வாளர்களால் டெக்ஸ்டைல்ஸ், ஆயத்த ஆடைகள் மற்றும் இனிப்பு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

மேலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் இரட்டை விலை குறித்து சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.

முத்திரை இடப்படாத, தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News