நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் குவித்த பொதுமக்கள்
- நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
- அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆதார் மையத்தில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
இதனால் ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 9 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்த நபர்களுக்கு மட்டும் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையமானது அரசு விடுமுறை நாட்களை தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏரளாமான பொதுமக்கள் குவித்தனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் பெயர் மற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்ட வைகளை திருத்தம் செய்து சென்றனர். மேலும் ஆதார் திருத்தம் செய்வதற்கு பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆதார் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.