உள்ளூர் செய்திகள்

கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்

நாகர்கோவிலில் கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்

Published On 2022-10-23 07:05 GMT   |   Update On 2022-10-23 07:05 GMT
  • பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
  • பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

நாகர்கோவில்:

தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை பட்டாசுகள் வெடித்து உற்சா கமாக கொண்டாடி வரு கிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செம்மாங் குடி ரோட்டில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர்.

செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அதிகமாக காணப் பட்டதையடுத்து அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந் தது. போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மீனாட்சிபுரம் வேப்பமூடு மணிமேடை கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடைவீதிகளில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிக மாக இருந்தது. பட்டாசு கடைகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வாங்க குவிந்திருந்தனர்.பேக்கரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகை யொட்டி வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் குமரி மாவட்டத் திற்கு பஸ்களில் வந்தனர்.இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில்களிலும் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்கினார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முக்கிய சந்திப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு வெடித்து கொண்டாடுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News