குமரி மாவட்டத்தில் கன்னிபூ சாகுபடி நடவு பணி தொடங்கியது
- வயல் உழவு பணி, நாற்றுப் பாவும் பணிகள் நடை பெற்று வந்தது.
- மாவட்டம் முழுவதும் விதை நெல்கள் தங்கு தடை இன்றி வழங்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிபூ, கும்பபூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது கும்பபூ சாகுபடி பணிகள் நிறைவடைந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டினார்கள். வயல் உழவு பணி, நாற்றுப் பாவும் பணிகள் நடை பெற்று வந்தது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக ஒரு சில பாசன குளங்களும் நிரம்பியுள்ளது. அணை களிலும் நீர்மட்டம் அதிக ரித்து உள்ளதையடுத்து சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.
பூதப்பாண்டி, அரும நல்லூர், தக்கலை பகுதி களில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது. சுசீந்திரம் பகுதியில் ஏற்கனவே விவசாயிகள் நாற்றுபாவி இருந்தனர். தற்பொழுது மழை பெய்ததையடுத்து வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டனர். நடவு பணியும் தொடங்கி நடந்து வருகிறது. பெண்கள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் விதை நெல்கள் தங்கு தடை இன்றி வழங்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதைகளை விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீரில் உள்ள தால் விவசாயிகள் சாகுபடி பணியில் ஆர்வம் காட்டி உள்ளனர். பேச்சிப் பாறை அணை நீர்மட்டத்தை பொறுத்தமட்டில் இன்று காலை 37.46 அடியாக உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சானி அணை நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப் படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 8.63 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.50 அடியாகவும், மாம்பழத்து றையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.