குமரி கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
- 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடக்கிறது. விழா வில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடு கிறார்.
பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார். சுதந்திர தின விழாவை யொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக ஆயுதப் படை மைதானத்தில் நடந்தது. இன்று நாகர்கோ வில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைய டுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் வெளியூர்க ளில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகி றார்கள்.
நாகர்கோவில், கன்னியா குமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கடற்கரை கிரா மங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர காவல்துறையினர் நவீனபடகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.