உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

இரணியல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் வழக்கு

Published On 2023-03-24 08:16 GMT   |   Update On 2023-03-24 08:16 GMT
  • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
  • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News