உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையத்தில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் நாகர்.மாணவர்கள் 10 பேருக்கு பரிசு

Published On 2022-06-16 07:52 GMT   |   Update On 2022-06-16 07:52 GMT
  • ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டூ காய் இந்தியா சென்புகாய் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்
  • பயிற்சி அளித்து அழைத்து சென்ற கியோஷி ஸ்டீபன் கிறிஸ்து ராஜூக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

நாகர்கோவில்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அகில இந்திய கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் நாகர்கோவில் ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டூ காய் இந்தியா சென்புகாய் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். கோட்டவிளை ஜெஸ்வின் ஆன்றனி டீம் கட்டா பிரிவில் முதல் பரிசும், ரிஸ்ட்றோ தனி நபர் கட்டா பிரிவிலும், அப்ரிஜா குழு கட்டா பிரிவில் 2-ம் பரிசும் மற்றும் குமித்தே பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றார்.

இதுபோல அஸ்லின் டீம் கட்டா பிரிவிலும், சைமன் நகர் ஆகாஸ் தனி நபர் குமித்தே பிரிவிலும், ஜார்ஜ் சவுரவ் டீம் கட்டா பிரிவிலும், கிறிஸ்து நகர் ஷான் பிரின்ஸ்றன் டீம் கட்டாவில் முதல் பரிசும், ஜெய்சன், ஹாரிசன், கோகுல் கட்டா பிரிவில் பரிசு பெற்றனர். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அழைத்து சென்ற கியோஷி ஸ்டீபன் கிறிஸ்து ராஜூக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News