பூதப்பாண்டி அருகே ராஜீவ்காந்தி சிலையை உடைத்த ரெயில்வே ஊழியர் ஜெயிலில் அடைப்பு
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதி துண்டான நிலையில் நேற்று காலையில் கிடந்தது. இதை பார்த்து காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்ட தகவல் மாவட்டம் முழுவதும் பரவி யது. இதையடுத்து விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், தோவாளை வட்டார காங் கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.
போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். இது தொடர்பாக அருமநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சஜூன் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்தனர்.
பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது மதுபோதையில் ராஜீவ் காந்தி சிலையை சேதப்ப டுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஜூனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜூன் நாகர்கோவில் ரெயில்வே யில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.