உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் குறைப்பு

Published On 2022-10-31 08:18 GMT   |   Update On 2022-10-31 08:18 GMT
  • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
  • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. கோழிபோர்விளை, குருந்தன்கோடு, ஆணைக்கிடங்கு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

அணை பகுதிகளில் மழை சற்று குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 1084 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.60 அடியாக உள்ளது.

அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 381 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் 1084 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.31 அடியாக உள்ளது.

அணைக்கு 401 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .பேச்சி பாறை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் இன்றும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News