குழித்துறையில் அலங்கார தரைகற்கள் பதித்த நிலையில் முடங்கி கிடக்கும் சாலைப்பணி
- வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் கடும் அவதி
- நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
பாலவிளை, ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலகங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள். இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர்.
மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம டைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால் தான் தீக்குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் அந்த சாலை சீரமைக்க படாத நிலையே கிடந்துள்ளது. சாலை சீரமைக்கபடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாதவாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர்.
மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ங்களும் பொதுமக்களும் 2 கிலோமீட்டர் சுற்றி மாற்று பாதை வழியாக சென்று வந்தனர். மேலும் குழித்துறை நகராட்சி நிர்வாகமும் அந்த வார்டு கவுன்சிலரும் சேர்ந்து இந்த சாலை பணியில் பல முறைகேடுகள் செய்ததாக ஊர் மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சூழலில் அந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டு மெதுவாக செய்யப்பட்டு வருகிறது. பாலவிளை ஈத்தவிளை சாலை ½ கிலோமீட்டர் தான் உள்ளது. இந்த தூரத்தில் உள்ள சாலை பணியை செய்ய 5 நாட்களே போதுமானது. ஆனால் நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
மேலம் 2 மாதங்களாக மாற்று பாதை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளா கியுள் னர். மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பால விளை ஈத்த விளை சாலையில் அலங்கார கற்கள் பதித்தது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாதவாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைபணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொது மக்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.