வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்
- இணை இயக்குனர் தகவல்
- 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவ்வை மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லா இளைஞர்களை தொழில் முனைேவாராக்கும் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில் அக்ரி கிளினிக் (வேளாண்) அல்லது வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்ப டுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயனடைய தகுதியான பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எனவே இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகுதி ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இது தொடர்பாக குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது அந்தந்த தாலுக்காக்களில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.