உள்ளூர் செய்திகள் (District)

வடசேரியில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அறிவுரை வழங்கிய காட்சி.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்

Published On 2022-10-28 07:17 GMT   |   Update On 2022-10-28 07:17 GMT
  • குமரியில் ஒரே நாள் சோதனையில் ரூ.4 லட்சம் வசூல்
  • வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் புதியதாக உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தி னார்கள்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. பெண் கள் சிலரும் இந்த ஹெல்மெட் சோதனையில் சிக்கி இருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்க ளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார். ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

ஹெல்மெட் உயிர் கவசமாகும். அதை கண்டிப் பாக அனைவரும் அணிய வேண்டும்.சாலை விதிமுறை களை கடைபிடித்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும். தற்பொ ழுது போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியா விட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருப்பவருக்கும் அபாரம் விதிக்கப்படும்.

மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10000 செல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1000 லைசென்ஸ் இல்லாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.அபராதம் விதிப்பது போலீசாரின் நோக்கம் அல்ல. சாலை விதிகளை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி, நாகர்கோவில் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் இருந்தவர்களுக்கும் போலீ சார் அபராதம் விதித்தனர்.

நேற்று ஹெல்மெட் அணி யாமல் வந்த 401 பேருக்கு அபராதம் விதிக் கப்பட்டது. இதன் மூலமாக ரூ.4 லட்சத்து 1000 வசூல் ஆகி உள்ளது. மேலும் சாலை விதிமுறைகளை கடை பிடிக்காத 199 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News