உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் ரூ.115.38 கோடி தள்ளுபடி - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-08-31 06:43 GMT   |   Update On 2023-08-31 06:43 GMT
  • சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள்
  • சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 720 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.07.2023 வரை சுழல்நிதி கடனாக 337 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 1265 குழுக்களுக்கு ரூ.9.38 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ் 160 நபர்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 24094 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1372.49 கோடி வங்கி கடன் பெற்றுதரப் பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 52 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.32.30 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 3558 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.115.38 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 2297 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News