புதுக்கடையில் கார்-ஆட்டோவில் கடத்திய மண்எண்ணை பறிமுதல்
- கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தல்
- சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசின் மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கடத்தப்படுவதால் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அம்சி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 10 கேன்களில் 350 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கார் மற்றும் மண்எண் ணையை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்த போது, தூத்தூர் பகுதி ஆன்டனி சேவியர் (வயது 41) என்பவர் முள்ளுர்துறை பகுதி அலக்சாண்டர் என்பவரிடம் இருந்து வாங்கி கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.
இதேபோல் பார்வதி புரத்தில் வைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 35 லிட்டர் கொள்ளள வுள்ள 5 கேன்களில் 175 லிட்டர் மானிய விலை மண்எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் என்ற இடத்தை சேர்ந்த அவுசேப் (31) என்பவர் இனயம் புத்தன்துறை பகுதி சொப்னா என்பவரிடம் இருந்து மண்எண்ணை வாங்கியது தெரிய வந்தது.
புதுக்கடை போலீசார் பறிமுதல் செய்த வாக னங்கள், மண்எண்ணை போன்றவற்றை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயலாதேவியிடம் ஒப்படைத்தனர்.