உள்ளூர் செய்திகள்
மணவாளக்குறிச்சியில் அனுமதியின்றி எம் சாண்ட் கொண்டு சென்ற டெம்போ பறிமுதல்
- டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
- டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி புவியியலாளர் ஸ்ரீ குமார், டிரைவர் பிரைட் ரிச்சர்ட் ஆகியோர் மணவாளக்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு எம் சாண்ட் மணல் கொண்டு சென்ற ஒரு டெம்போவை நிறுத்தினர்.
உடனே டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் டெம்போவை சோதனை செய்ததில் அதில் 1 டன் எம் சாண்ட் மணல் இருந்தது.
ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. திருட்டுத்தனமாக எம் சாண்ட் மணல் கொண்டு செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இது பற்றி புவியியலாளர் சுரேஷ்கு மார் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.