குமரியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்கள் வெளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்
- தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.
இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.