மாநில அளவிலான மக்கள் நலத் திட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம்
- போலீஸ் துணை சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்
- கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடக்கிறது
கன்னியாகுமரி :
தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பழனியாபிள்ளை, பாடகர் கண்டன்விளை ராஜேந்தி ரன் ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் மாநில அளவிலான மக்கள் நலத் திட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நடத்த முடிவு செய்தனர்.
இதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. போலீஸ் துணை சூப்பி ரண்டு மகேஷ்குமார் கொடி அசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி, மற்றும் கிருஷ்ண மூர்த்தி, சிலுவை வஸ்தியான், சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்கள் வழியாக வருகிற 14-ந்தேதி சென்னை சென்றடைகிறது. 15-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பின்னர் இவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக 22-ந் தேதி மீண்டும் கன்னியாகுமரியில்வந்து இந்த பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
மொத்தம் 23 நாட்கள் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வழி நடுகிலும் பள்ளி கல்லூரி களில் மாணவர்களிடம் இவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள்.