உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

தனியார் சாப்ட்வேர் நிறுவனம் மீது மாணவர்கள் புகார்

Published On 2022-11-06 07:32 GMT   |   Update On 2022-11-06 07:32 GMT
  • பணம் பெற்றுக் கொண்டு முறையாக பயிற்சி அளிக்கவில்லை
  • கருங்கல் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மார்த்தாண்டம் சாலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் சாப்ட்வேர் பயிற்சி வழங்குவ தாகவும், பயிற்சி முடித்தபின் நிறுவனத்திலேயே வேலை வழங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை நம்பி பூட்டேற்றி, பாலப்பள்ளம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு பயிற்சியில் சேர்ந்து உள்ள னர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் திடீரென பயிற்சி மையம் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

பயிற்சியில் சேர்ந்த மாணவர்களிடம் 6 மாத பயிற்சி கட்டணமாக ரூ. 50 ஆயிரத்தை சாப்ட்வேர் நிர்வாகத்தினர் பெற்ற தாகவும் தற்போது முறையாக பயிற்சி வழங்காமல் யூ.டியூப். பார்த்து பழகிக்கொள்ள அறிவுறுத்துவதாகவும் மாணவர்கள் புகாரில் கூறி உள்ளனர்.

தாங்கள் ஏமாற்றப்பட்ட தாக கூறும் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களையும் பணத்தையும் திரும்ப கேட்டபோது நிர்வாக தரப்பில் வெற்று பேப்ப ரில் கையெழுத்து கேட்டதாகவும் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தெரி வித்தனர்.

இந்த நிலையில் நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் தங்கள் நிறுவனத்தில் தகராறு செய்ததாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் பயிற்சி பெறும் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் நேற்று போலீஸ் நிலையம் திரண்டு வந்து சாப்ட்வேர் நிறுவனத்தினர் மீது புகார் அளித்தனர்.

தங்களுக்கு முறையாக பயிற்சி தராமலும் வேலை தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் புகாரில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News