குமரியில் 3 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு
- 3 ஆயிரத்து 844 பேர் எழுதுகிறார்கள்
- கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் (ஆண் மற்றும் பெண்) பதவிகளுக்கான முதன்மை தேர்வு 26-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மொழித் தகுதி தேர்வு மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடக்கிறது.
இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 844 பேர் எழுத உள்ளனர். இதற்காக மொத்தம் 4 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதாவது நாகர்கோவில் பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி என்ஜினீய ரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா இன்ஸ்டிடியூட், சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட் ஆகிய 4 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அன்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படு வார்கள். தேர்வுக் கூட அனுமதி சீட்டில் குறிப்பிட் டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய இயலாது. தேர்வு கூட அனுமதி சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையை கொண்டு வருவது உகந்தது.
செல்போன், கால்கு லேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப் பட மாட்டாது. எழுத்து தேர்வுக்கு வரும்போது கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.
தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணைய இணையதளமான www.tn.gov.in/tusen.com என்ற இணைய தளத்திலிருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652-220167 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.