ஆசாரிபள்ளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் திடீர் மோதல்
- மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர்
- ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலயத்தின் முன் பகுதியில், பங்கு பேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு சென்றனர். இரு தரப்பி னரையும் போலீசார் சமாதா னம் செய்தனர். ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு திருவிழா நடத்துவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.