கன்னியாகுமரியில் இரவு முழுவதும் "திடீர்" பனிமூட்டம்
- சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.
- சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம்
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று பகல் முழுவதும் வானம் மப்பும்மந்தாரமாக காட்சியளித்தது.
இதனால் பகல் முழு வதும் வெயிலையே பார்க்க முடியவில்லை. இடை இடையே சாரல் மழையின் தூரல் விழுத் தது. காலையில் மழை பெய்ததால் மழைமேகத்தின் காரணமாக சூரியன் உதய மாகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மாலையிலும் மேக மூட்டத்தின் காரணமாக சூரியன் மறையும் காட்சி தெளிவாகத் தெரியவில்லை. இந்த காட்சியையும் பார்க்க முடியாமல் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழை தூரலின் காரணமாக மாலையில் கடுமையான குளிர்காற்று வீசியது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கடற்கரையில் குளிர் வாட்டி வதைத்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுகளுக்கு திரும்பிச் சென்ற வண்ணமாக இருந்தனர். இரவு முழுவதும் கன்னியாகுமரியில் பனிப்பொழி வாகவே இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி முழுவதும் ஒரே பனி மூட்ட மாக காட்சி அளித்தது.
சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜுகளிலேயே முடங்கி கிடந்தனர்.