உலக மீனவர் தினத்தையொட்டி குமரி மாவட்ட மீனவர்களுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வாழ்த்து
- நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், அமைப்பு செய லாளருமான தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. வெளியி ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதா வது:-கள்ளம், கபடமின்றி அனைவரிடத்திலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி, இருப்பதை கொடுத்து இன்முகத்தோடு நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பா ர்கள். மீனவ சமுதாயம் பொருள் இல்லாத வர்க ளுக்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும், பசித்தவர்களுக்கு உண்ண உணவினையும் எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவும் ஈகை நிரம்பிய குணம் கொண்ட சமுதாயம் மீனவ சமுதாயம்.
உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் மாதம் 21-ந்தேதி அன்று மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 7515 கிலோ மீட்டர் நீள முள்ள கடற்கரையில், சுமார் 1076 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டு ள்ளது தமிழ்நாடு.
மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், மீனவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், அவர்களின் உள்ளம் மகிழவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து க்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.