தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு நாளை கன்னியாகுமரி வருகை
- இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
கன்னியாகுமரி :
தமிழக சட்டமன்ற உறுதி மொழி குழு அதன் தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை இரவு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது. இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் 3-ந்தேதி காலையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை யில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் காமராஜர் மணி மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு தளம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளு வர் சிலைக்கு தனிபடகு மூலம் செல்கின்றனர். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளு வர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழையிலான இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணியை பார்வையிடுகின்ற னர். அதன் பிறகு இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.தொடர்ந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.