வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் செய்துள்ளது
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
- அய்யப்ப பக்தர்கள் ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
நாகர்கோவில்:
அகில பாரத அய்யப்ப சேவா சங்க கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதானம் வழங்கும் தொடக்கவிழா சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் மாவட்டத் தலைவர் மதுசூதன பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிமணி அறிமுக உரையாற்றினார். இவ்விழாவில் சபரிமலை விழாக்கால அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதானத்தை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு வெளிமாநி லங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் புதிதாக ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதில் வருகை தருகின்ற ஐயப்ப பக்தர்கள் தங்கலாம். மேலும் மூன்று நேரம் உணவு வழங்கும் வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக சிறந்த முறையில் பல்வேறு வசதிகளை செய்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் பணிகளை பாராட்டுகிறேன்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாநில இணைச் செயலாளரும், மாவட்டசெயலாருமான ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
விழாவில் அய்யப்ப பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதனை தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.