உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் மாமியாரிடம் நகை பறித்த பெண்ணை மடக்கிப்பிடித்த மருமகள்

Published On 2022-10-09 08:29 GMT   |   Update On 2022-10-09 08:29 GMT
  • மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

வல்லவிளை குருசடி வளாகத்தைச் சேர்ந்தவர் மேரிசைனி (வயது 32). இவரது மாமியார் டெல்பி.

இவர்கள் இருவரும் வல்ல விளையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்த னர். மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பஸ் நிறுத் தத்தில் பஸ் நின்றபோது டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலிச் செயினை இளம்பெண் ஒருவர் பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

இதை பார்த்த ஷைனி அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தார். உடனே பொது மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து மார்த்தாண் டம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்திய போது பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பவானி (39) என்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பவானிக்கு குமரி மாவட்டத்தில் வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானியுடன் அவரது கூட்டாளிகள் யாரும் வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மூன்று பெண்களிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்கப்பட்டது இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News