அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிற்றாறு பகுதியில் உள்ள பொதுமக்களுடன் வனத்துறையினர் இன்று ஆலோசனை
- ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது
- தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி
நாகர்கோவில் :
சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் குடி யிருப்புகள் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்ச மடைந்தனர். அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை புலி கடித்து கொன்றது.
இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட னர். அங்கேயே முகாமிட்டு வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை. தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்ததையடுத்து தேனியில் இருந்து எலைட் படையினரும் களக்காட்டில் இருந்து டாக்டர் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தேடும்பணி நடந்தது.
2 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டதுடன் 50 இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து நவீன காமிரா கொண்டு வரப்பட்டு இரவு நேரங்களில் புலி நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ட்ரோன் காமிரா மூலமா கவும் கண்காணிப்பு பணி நடந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் புலி நடமாட்டம் குறைந்தது. இதையடுத்து புலியை பிடிக்க வனத்துறையினர் புதுவியூகம் மேற்கொண்ட னர். ஆட்கள் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே புலியை பிடிக்க முடியும் என்று முடிவு செய்தனர்.
இதனால் தற்போது தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலைட் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். டாக்டர் குழுவினர் மட்டும் கண்காணித்து வருகிறார்கள். தற்போது சிற்றாறு பகுதியை சுற்றி அனைத்து காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிற்றாறு காலனி பகுதியில் அந்த பகுதி மக்களுடன் வனத்துறை யினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வன அதிகாரி இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். புலியை பிடிப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், புலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆடுகளை அடைத்து வைத்ததன் மூலமாக புலி நடமாட்டம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் தற்காலிகமாக தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.