ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- ஆரல்வாய்மொழியில் 1965-ம் ஆண்டு அரசின் மூலம் கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் தள வாய்சுந்தரம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆரல்வாய்மொழியில் 1965-ம் ஆண்டு அரசின் மூலம் கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் பணிபுரிந்துவந்த னர். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 12 ஆயிரத்து 500 கதிர்களாக இயங்கி வந்த யூனிட்டை, 25 ஆயிரம் கதிர்களாக உயர்த்தி, கூட்டுறவு நூற்பாலைக்கு நேரடியாக வந்து அதனை தொடங்கி வைத்தார்.
இதனால் கூட்டுறவு நூற்பாலை லாபகரமாக இயங்கி வந் தது. தொழிலாளர்களுக்கு 32 சதவீத போனசும் வழங் கப்பட்டது. 2013-ம் ஆண்டு முதல்வராக இருந்தஜெயல லிதா பழைய இயந்திரங் களை அகற்றி, நவீன மய மான புதிய எந்திரங்கள் அமைப்பதற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்தார். இப்ப ணிகள் நிறைவுற்று நவீன மயமாக்கப்பட்ட ஆலை யினை 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் கானொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக இந்த 36 தினக்கூலி தொழி லாளர்களுக்கும் பணி வழங்க நிர்வாகம் மறுத்து வருகிறது. மீதமுள்ள 197 தினக்கூலி தொழிலாளர் களுக்கும் வாரம் இரு நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தற்போது தினக்கூலி தொழிலாளர்க ளாகபணிபுரியும் 233 தொழி லாளர்களுக்கு, முறையாக பணி வழங்காமல் கூட்டு றவு நூற்பாலை நிர்வாகம் வெளிமாநிலத்தை சார்ந்த 20 தொழிலா ளர்களை ஒப் பந்தஅடிப்ப டையில்நேற்று பணியமர்த்தி உள்ளது. இச் செயல் கண்டிக்கத்தக்கது. வெளி மாநிலத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களை திரும்ப பெற்று, ஏற்கனவே பணிபு ரிந்து வந்த தமிழக தொழி லாளர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.