உள்ளூர் செய்திகள்

வில்லுக்குறியில் மலையாண்ட பெருமாள் கோவிலை புனரமைப்பு செய்ய வேண்டும்

Published On 2023-11-22 07:07 GMT   |   Update On 2023-11-22 07:07 GMT
  • இந்து தர்ம பேரவை தமிழக அரசுக்கு மனு
  • ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை

இரணியல் :

குமரி மாவட்டம் வில்லுகுறி அருகே மாம்பழத்துறையாறு அணையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலச்சுவடி என்னும் பகுதியில் 164 சென்ட் நிலப்பரப்பில் மலையாண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் இப்போது அறநிலையத்துறையை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு வேளை பூஜை கூட சரியாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.

மிகவும் பழமையான இந்தக் கோவில் மற்றும் கோபுரங்கள் இடியும் தருவாயில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய வழிவகைகள் செய்து தர வேண்டும். மேலும் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் இருந்தால் அதையும் மீட்டு எடுக்க வேண்டும் என ஹிந்து தர்ம பேரவை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் மனு அனுப்பி உள்ளது.

Tags:    

Similar News