நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி
- அமைச்சர் மனோ தங்கராஜ்- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தனர்
- ரூ.12 லட்சம் செலவில் சிறிய பாலம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி 36-வது வார்டுக் குட்பட்ட செந்தூர் நகர் 4-வது தெரு, 5-வது தெரு, சரலூர் ரோடு, டி.வி.எஸ். காலனி 1-வது தெரு, 3-வது தெரு ஆகிய பகுதிகளில் ரூ.15 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த பணியை அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், ஒன்றிய செயலாளர் மதியழகன், பகுதி செயலாளர் ஷேக் மீரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் 8-வது வார்டுக்குட்பட்ட கைலாஷ் நகரில் ரூ.5.50 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணியையும், 26-வது வார்டுக்குட்பட்ட பாறைக்காமடை தெருவில் ரூ.12 லட்சம் செலவில் சிறிய பாலம் அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.