உள்ளூர் செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவுபடி நடைபாதையில் திறந்த வெளியில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது

Published On 2023-11-18 09:27 GMT   |   Update On 2023-11-18 09:48 GMT
  • சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்.
  • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு நவம்ப ர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இந்த சீசனையொட்டி கன்னியா குமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

இந்த ஆண்டு மொத்தம் 122 சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 34 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதிஉள்ள 88 கடைகள் 22-ந்தேதி மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் கன்னியா குமரி சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள பகுதியிலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியா பாரிகள், ஐகோர்ட்டு அறிவுரையின்படி கடைகள் போன்று கட்டாமல் நடை பாதையில் திறந்த வெளி யில் சீசன் கடைகளை வைத்துவியாபாரம்செய்ய தொடங்கிஉள்ளனர். இந்த சீசன் கடைகளில் இரவு-பகலாக வியாபாரம் நடந்து வருகிறது.

Tags:    

Similar News