உள்ளூர் செய்திகள்

தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா திருப்பலி

Published On 2023-08-06 09:00 GMT   |   Update On 2023-08-06 09:00 GMT
  • பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி
  • விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை. பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

கன்னியாகுமரி :

தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை பெற்றது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட் வின் வின்சென்ட் மறையுரை யாற்றினார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரி வின் சென்ட் மற்றும் பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News