உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2023-11-19 07:32 GMT   |   Update On 2023-11-19 07:32 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

நாகர்கோவில் :

கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹார விழா குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று நடந் தது.

இந்த விழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுரு கன் சன்னதியில் நேற்று காலையில் முருகப்பெருமா னுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

நாகராஜா கோவிலின் 4 ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னர் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. தொடர்ந்து சாமி கோவி லுக்கு எழுந்தருளினார். இன்று நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி பெரு மாள்புரம் இந்து நாடார் சமு தாயம் வவ்வால்குகை பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று மாலையில் நடந்தது. இதனையொட்டி வவ்வால் குகை பாலமுருகன் சுப்பிரமணியபுரத்திலிருந்து மெயின்ரோடு வழியாகமேள தாளங்களுடன் சூரன் முன்னே செல்ல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் பாலமுரு கன் பின்னே துரத்தியபடி சென்றார். மாலை 6.30 மணிக்கு சூரனை பால முருகன் வதம் செய்தார். தொடர்ந்து கண்ணை கவரும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட் டளை தலைவர் பகவதி யப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுயம்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தோவாளை செக்கர்கிரி சுப்ரமணியசாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா அதிர்வேட்டு முழங்க வானவேடிக்கையோடு கேரள பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண் டார்கள். தினசரி முருகப்பெ ருமானுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று சூரசம்கா ரத்தை முன்னிட்டு செக் கர்கிரி ஆலயத்தில் இருந்து வேலவன் பல்லக்கில் சூரசம்ஹாரத்துக்கு புறப் பட்டு கோவில் அடிவா ரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளக் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதை பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.

விழா ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழா கமிட்டி செய்து வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதி யப்பன், பொறியாளர் லட்சுமணன், விழா குழு நிர்வாகி கருணாநிதி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணுஉள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

முடிவில் வான வேடிக்கை நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த முருகன் கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது. வடிவீஸ்வ ரம் அழகம்மன் கோவில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோவில், தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி முருகன் குன்றம் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்களுடன் பட்டண பிரவேசம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News