உள்ளூர் செய்திகள்

தீ விபத்து குறித்து திருவனந்தபுரம் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை

Published On 2023-08-29 07:07 GMT   |   Update On 2023-08-29 07:07 GMT
  • சுத்தம் செய்யும் பொருட்கள் வைக்கும் அறையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை
  • நாகர்.ரெயில் நிலையத்தில் தீ விபத்து

நாகர்கோவில் :

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களை காலை, மாலை நேரங்களில் ஊழி யர்கள் சுத்தம் செய்வது வழக்கம். சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் ப்ளீச்சிங் பவுடர், பினாயில் திராவ கம் உள்ளிட்ட பொருட் களை முதலாவது பிளாட் பாரத்தில் உள்ள நடை மேடை யில் படிக்கட்டின் கீழ் உள்ள ஒரு அறையில் வைக்கப்படும். நேற்று அந்த அறையில் இருந்து காலை புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீய ணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அறையில் இருந்த பொருட்கள் முழு வதும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.முதற்கட்ட விசாரணை யில் ப்ளீச்சிங் பவுடர், பினாயில் பொருட்கள் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தீப்பிடித்தி ருக்கலாம் என்று தெரி கிறது. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். திருவனந்த புரத்திலிருந்து இந்த பிரச்சினை தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிளாட்பா ரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் வைப்ப தற்கான அறையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோ சித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஊழியர்க ளின் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது துறை வாரியாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News