உள்ளூர் செய்திகள்

குலசேகரத்தில் திருவட்டார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-04 07:52 GMT   |   Update On 2023-11-04 07:52 GMT
  • பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
  • அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

திருவட்டார் :

குமரி மேற்கு மாவட்டம் திருவட்டார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. ஒன்றிய செயலா ளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஜெஸ்டின்ராஜ் முன்னிைல வகித்தார். அமைப்பு செயலாளர் சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்ஷன், ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் அண்ணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சி, திற்பரப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கிளை செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் என 69 பேர் வீதம் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இருக்க வேண்டும். இவர்கள் ஒவ்வொரு வீடுதோறும் சென்று அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கட்சியின் பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கி றாரோ அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

பொய் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

அனைத்து கட்சி நிர்வாகிகளும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் முழு மூச்சாக கட்சி பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.

Tags:    

Similar News