குமரியில் 240 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு
- கைக்குழந்தைகளுடன் மையங்களுக்கு வந்தவர்கள் உறவினர்களிடம் கொடுத்து சென்றனர்
- தேர்வை எழுத 11 ஆயிரம் பேர் வரவில்லை
நாகர்கோவில்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வில்லை.
இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதி யில் குரூப் 4 தேர்வு தொடர் பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் வெளியிடப் பட்டது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7,382 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேர்வு எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். குமரி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்பாணை ஆன்லை னில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் அதை பதிவிறக்கம் செய்தனர். அதில் தேர்வு மையம் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து தேர்வு எழுதுபவர்கள் அந்தந்த மையம் எந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஒரு சிலருக்கான தேர்வு மையத்தை கண்டுபிடிப்ப தில் சிக்கல் ஏற்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட பகுதி யில் உள்ள இளைஞர் கள், இளம்பெண்கள் பல ருக்கு மேற்கு மாவட்ட பகுதி யில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர்கள் இன்று காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். பெண்களை தங்களது பெற்றோர் மற்றும் கணவர்கள் இருசக்கர வாகனங்களில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.
நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி, குமரி மெட்ரிக் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 38 மையங்களில் குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காலை யிலேயே தேர்வு மையத் திற்கு வந்திருந்தனர். அவர்கள் பலத்த பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.
ஒரு சில பெண்கள் கை குழந்தைகளுடனும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றபோது தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் கை குழந்தையை கொடுத்து விட்டு சென்றனர்.
கால்குலேட்டர், செல் போன்கள் போன்ற எலக்ட்ரா னிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து செல்போன்களை தங்களது உறவினர்களிடம் சிலர் கொடுத்து சென்றனர். மற்றவர்கள் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போன்களை வைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.
தேர்வு மையத்திற்கு சென்ற இளம்பெண்களை அழைத்து வந்த பெற் ேறார்கள் தேர்வு மையத் திற்கு வெளியே கொழுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த னர். தக்கலை, குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி, மார்த்தாண் டம், கருங்கல் உள்பட மாவட்டம் முழு வதும் 240 மையங்களில் இன்று தேர்வு நடந்தது தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
240 வீடியோ கிராபர்கள் மூலம் தேர்வு முழுவதும் பதிவு செய்யப்பட்டது. தேர்வை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் மற்றும் 240 அலுவலர்கள் 48 மொபைல் பறக்கும் படையினர் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் தேர்வுக்கு 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 11 ஆயி ரத்து 568 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை. 59 ஆயி ரத்து 884 பேரே தேர்வை எழுதினர்.