கன்னியாகுமரி கடலில் உயிர்ப்பலியை தடுக்க முக்கடல் சங்கமத்தில் மிதவை அமைத்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டும்
- பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
- படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்த ர்கள் சீசன் காலம் தொடங்க உள்ளது. சீசன் காலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்க ணக்கான அய்யப்ப பக்த ர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடு வார்கள். இதனால் பாதுகாப்பு காரணமாக முக்கடல் சங்க மத்தில் பக்தர்கள் குளிக்கும் பகுதியின் இரு புறமும் பாதுகாப்பு மிதவை கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட வில்லை. இதனால் பக்தர்க ளின் உயிருக்கு ஆபத்து ஏற்ப டும் சூழல் ஏற்பட்டுஉள்ளது. அதேபோல் தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் முக்டல் சங்கமம் படித்து றையில் படிந்திருக்கும் பாசிகள் அகற்றப் படாத தால் புனித நீராட வரும் வயதான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையில் கீழே விழுந்து கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கிழே விழுந்து காயத்துடன் சென்று உள்ள னர்.எனவே உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன் கன்னி யாகுமரி முக்கடல் சங்க மத்தில் பாதுகாப்பு மிதவை கள் அமைப்பதோடு படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.