கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது குறித்து கட்டிடக்கலை நிபுணர் ஆய்வு
- கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது
- ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் :கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலி ல் ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம், 66 அடிநீளம், 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதே போல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.
இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் தலைமை ஸ்தபதியும், மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர்கடந்த சில நாட்களுக்குமுன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் ராஜகோ புரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜ கோபுரத்தின் உயரத்தை 120அடியில் இருந்து 150 அடியாஉயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ராஜ கோபுரத்தை9நிலை யில் இருந்து 11நிலையாக மாற்ற வும் பரிசீலனை செய்யப் பட்டுவருகிறது. இந்தராஜ கோபுரம்ரூ.15 கோடி முதல்ரூ.20கோடிமதிப் பீட்டில்அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான அளவீடுகளை மறு ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி இன்று காலை நடந்தது.
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற கட்டி டக்கலை நிபுணர் அக்சயா பால கிருஷ்ணன் தலைமை யிலான கட்டிடக்கலை வல்லுநர்கள் குழு இன்று காலை பகவதி அம்மன் கோவிலில் வடக்கு வாசல் மற்றும் கிழக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடங்களை பார்வையிட்டு ராஜகோபரத்துக்கான இறுதிக்கட்ட அளவீடு செய்து வரைபடத்துக்கான ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்ட னர்.
இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், சர்வேயர் அய்யப்பன், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.