உள்ளூர் செய்திகள்

வடசேரி பகுதியில் சாலை தடுப்பு வேலியால் மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்

வடசேரி-புத்தேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமல்

Published On 2022-10-07 11:38 GMT   |   Update On 2022-10-07 11:38 GMT
  • குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
  • வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கம்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சாலையின் நடுவே பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது குடிநீர்திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணி களை துரிதமாக முடிக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். இதனால் குடிநீர் பைப் லைன்கள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

வடசேரி அண்ணா சிலை சந்திப்பிலிருந்து புத்தேரி சிபிஎச் மருத்துவமனை வரை குடிநீர் குழாய் பதிக் கும் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து பஸ் போக்குவரத்தை மாற்றி விட போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டனர். இன்று காலை முதல் அந்தச் சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. வடசேரியில் இருந்து புத்தேரி வழியாக செல்லும் அனைத்து பஸ் களும் வடசேரி சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கர சாலை சென்று புத்தேரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடசேரி அண்ணா சிலை பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து சாலை மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டு இருந்தனர். இருப்பி னும் காலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதே போல் பூதப் பாண்டி, திட்டுவிளை, துவரங்காடு வழியாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், வாகனங்கள் புத்தேரி நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் வந்து வடசேரிக்கு சென்றது. இந்த போக்குவரத்து மாற்றம் குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி முடியும் வரை அமலில் இருக்கும் என்று போக்கு வரத்து போலீசார் தெரி வித்துள்ளனர்.

போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து சாலை நடுவே குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News