முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாக சரிந்தது
- பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக நாளை தண்ணீர் திறப்பு
- 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தற்பொழுது தண்ணீர் வினியோகிக்கப் பட்டு வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. நீர்மட்டம் மைனஸ் 19.40 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் மைனஸ் அடியை சென்றதையடுத்து தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். நாளை (25-ந்தேதி) முதல் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் அணைகளில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு முக்கடல் அணைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தற்பொழுது ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர மாநகராட்சி குடிநீர் லாரிகள் மூலமாகவும் ஒவ்வொரு பகுதியாக சென்று தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது. புத்தன் அணை குடிநீர் திட்டம் தற்பொழுது நாகர்கோவில் மாநகர பகுதியில் நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள 5 சதவீத பணிகளை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முழுமைபெறும் பட்சத்தில் நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடை இன்றி முழுமையாக தண்ணீர் விநியோகிக்க முடியும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்த வரை அணைகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.66 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.95 அடியாக உள்ளது. அவ்வப்போது அணை பகுதிகளில் மழை பெய்து வருவதால் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.