வடசேரி பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்
- இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல்
- 2 மணி நேர ஆய்வுக்கு பின் மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கழிவ றையை பார்வையிட்டார். கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். கடைகளில் ஆக்கிரமித்து கட்டி இருந்ததை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
மதுபோதையில் சிலர் அங்கேயே படுத்திருந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுமார் 2 மணி நேரம் பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயணி கள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையம் தற்பொழுது ரூ.2.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு வடசேரியில் ஒருங்கி ணைந்த பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட் டுள்ளது. அந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்தில் பில்லிங் மெஷின் செயல்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குருஞ்சி பஜார் மற்றும் பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இரவு நேரங்களில் பயணிகளுக்கு குடிபோதையில் சிலர் இடையூறு செய்வதாக புகார் வந்துள்ளது. சிலர் குடிபோதையில் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி விடுகிறார்கள்.
குடிபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றி திரிபவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர்களை இரவு நேரத்தில் பஸ் நிலை யத்திற்குள் கொட்டுவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாகவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்பிரமணியன், கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகி கள் உடன் இருந்தனர்.