நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தின விழா
- வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்
- தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன் புதுத்தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலார் (வருவிக்கவுற்ற திருநாள்) 201-வது அவதார தின விழா நடைபெற்றது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் டாக்டர் மகேஷ் வரவேற்றார்.
திருஅகவல், திருவடிப்புகழ்ச்சி பாராயணம் அங்ரி சுஜித், எம்.பி. ஆதிரா நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி மகா தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரதானத்தை நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர்.
10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், தேவசம் பொறியாளர் ராஜகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜா, ஆர். ஏ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பாரத்சிங், ரீத்தாபுரம் ஜான் போஸ்கோ, முன்னாள் மாநில கைத்தறி குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஊர்வகை தலைவர் சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானத்தை ஹெச்.சி.எல். திட்ட மேலாளர் சிவா, பிரிமியர் ரேடியோ உரிமையாளர் சுஜித், பாவநாசம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினார்.