மார்த்தாண்டத்தில் இரு சக்கர வாகனம் திருடும் கொள்ளையர்களின் வீடியோ வைரல்
- இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
- இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது.
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 35). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சமீபம், போலீஸ் நிலைய சந்திப்பில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி கடையின் முன்பு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை அதிகாலையில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், அஜினின் இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து, கள்ள சாவியை போட்டு திறக்க முயற்சிக் கின்றனர். ஆனால் அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் இருவரும் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ கட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை.
மேலும் 2, 3 மாதங்களில் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் அடிப்பகுதியிலிருந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு சென் றுள்ளன. ஆனால் குற்ற வாளிகள் கைது செய்யப்பட வில்லை. மார்த்தாண்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக திருட்டு வேலைகளில் ஈடுபடுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு மற்றும் இரு சக்கர வாகன திருட்டுகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.