உள்ளூர் செய்திகள்

கொட்டாரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமையில் காங்கிரசார் நடைபயணம்

Published On 2023-09-07 07:43 GMT   |   Update On 2023-09-07 07:43 GMT
  • இன்று மாலை நடக்கிறது
  • ராகுல்காந்தி நடைபயண ஓராண்டு நிறைவு

கன்னியாகுமரி :

ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு "ஜோடா யாத்திரை" என்ற தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார். ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அதனை நினைவு கூறும் வகையில் கொட்டாரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இன்று மாலை காங்கிரசாரின் நடைபயணம் நடக்கிறது.

கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலை முன்பு இருந்து இந்த நடைபயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்த நடை பயணத்துக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமை தாங்குகிறார். இந்த நடைபயணத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

கொட்டாரத்தில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் பெருமாள்புரம், மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் சென்று நிறைவடைகிறது.

Tags:    

Similar News