உள்ளூர் செய்திகள்

ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

Published On 2023-09-08 06:58 GMT   |   Update On 2023-09-08 06:58 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்

நாகர்கோவில் :

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தள வாய்சுந்தரம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் கீழ் சுமார் 1510 ஊர்ப்புற நூலகர்கள் பிளஸ்-2 மற்றும் சி.எல்.ஐ.எஸ்.சி. கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் (மாதம் ரூ. 10 ஆயிரம்) எவ்வித பிடித்தமும் இன்றி பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

மேலும் தற்போதைய கால சூழ்நிலையில் வருமானம் போதாததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளடக்கி தமிழ்நாட்டில் மொத்தம் 1510 ஊர்ப்புற நூலகர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்கிடவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தரம் உயர்த்தப்படாமல் உள்ள அனைத்து நூலகங்களையும் தரம் உயர்த்திட வேண்டும். மேலும் நூலகத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News