சீயோன்புரம் எல். எம்.எஸ் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு
- சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடந்தது
- முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
நாகர்கோவில்:
என்.ஜி.ஓ.காலனி அருகே உள்ள சீயோன்புரம் எல். எம். எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1992 -1994 கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள், குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி "சுவடுகள் பதிப்போம்" என்று சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் புவிராஜன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் சசிகுமார், மாணவி ரெஸா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கலந்துரையாடலில் முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்கள் சார்லஸ் தேவசிகாமணி, சஜீவ பிரகாசதாஸ், புனிதவதி, ஷீலாஷியாம், வசந்தா அன்னபெல், கிரேஸ்லின் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விழாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முன்னாள் மாணவர் வழக்கறிஞர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.