ஓமன் நாட்டில் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி
- அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
- மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மார்த்தாண்டம்:
கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.