உள்ளூர் செய்திகள்

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-05-20 10:36 GMT   |   Update On 2023-05-20 10:36 GMT
  • போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
  • அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்காக அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் அங்குள்ள பாலாமடம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதனை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனை செய்தனர். இதில் 3 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோட்டை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் (வயது 24), நித்திரவிளை ஆற்றுப்புரம் லிபின் (21) என தெரியவந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.

எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர். சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News